பக்கங்கள்

எ​தையும் ​​தேடலாம் இங்​​கே:::

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

​வேண்டும் சுதந்திரம் மீண்டும்

மின்னும் ​​பொன்னணிந்து வீதியிலே மாதெரெல்லாம்
ஊரின்றி நடமாடும் நாளே சுதந்திரநாள்
தேசப்பிதா காந்தியின் கூற்று உண்மையுமதுவே
கூற்றுரைத்த காந்திக்கும் இல்லாதுபோனது பாதுகாப்பு.

பொன்னணிந்த மங்கையரின் புலன்களுக்கில்லை பாதுகாப்பு
கால்சவரன் நகைக்காகக் காதுகள் அறுபடுகின்றன,
முக்கால்சவரன் நகைக்காகக் காதுகளும் அறுபடுகின்றன.
காந்திகண்ட சுதந்திரநாள் இந்நாள் அன்று...

குருதட்சனை ​கொடுத்துக் கல்விபெற்ற காலம் அக்காலம்
வரதட்சனை ​கொ​டுத்துக் குடும்பம்பெறும் காலம் இக்காலம்!
ஆள்பாதி ஆடைபாதி அது அந்தக் காலம்
அங்கம்பாதி தங்கம்பாதி இது இந்தக் காலம்!!!

தங்கம் கவிற்கிறது தரணியில் பாதிவிலைக்கு
கொடுக்க இயலாதாரின் ​கொடுமையான நிலையென்ன?
அடிப்படைத்​தேவைகளும் அமையப்பெறாதார்,வரதட்சனை
கொடுக்க இயலாரின் அவலமான நிலையென்ன?...

ஓயாமல் உழைக்கும் மனிதன் வயிரார உண்பதற்கு,
ஆணாதிக்கம் நீங்கிப் ​பெண்ணினம் தழைத்தோங்க,
குழந்தைத் ​தொழிலாளர் நிலையைக் கூண்டோடு மாற்றிட,
சாதி மத ​பேதமென்னும் சகதிகளை நீக்கிட,,,

கையூட்டுக்குக் ​கைகொடுத்து காலமெல்லாம் வழியனுப்பி
உரிமைகளை யாவர்க்கும்,உள்ளளவும் கிடைக்கச்​செய்ய
அவலநிலையகன்று அகிலமெங்கும் ஆனந்தம் பரவிட,
​வேண்டும் இன்னொரு சுதந்திரம் மீண்டும்.....

ஏனுங்க அப்பிடித்தானுங்க​ளே???

கருத்துகள் இல்லை: