ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் சயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே!!!
சிவனேயச் செல்வர்களே,
சிவனார் மகனாம் முருகன் வீற்றிருந்து அருள்பாலிக்கும்
தரணி போற்றும் தமிழகத்தின் பாரம்பரியத்தையும் பண்பட்ட பண்பாட்டையும் பறைசாற்றும் மண்டலம் கொங்கு மண்டலம். கொங்கு மண்டலத்தில் ஆயத்த ஆடைக்குப் புகழ்பெற்ற திருப்பூர் நகரிலிருந்து தென்கிழக்குத் திசையில் 24கல் தொலைவில் அழகுமிக்கு அமைந்துள்ளது சிவன்மலை.
ஈரோடை நகராம் ஈரோட்டில் இருந்து 45 கல் தொலைவில் பொலிவுடன் உயர்ந்துள்ளது சிவன்மலை.இம்மலை,கட்டிளம் காளைகளுக்குப் புகழ்பெற்ற காங்கேயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
மலையின் முழுத்தோற்றம்.
மலைஅமைப்பு
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனும் இருப்பானன்றோ!ஆம். இம்மலையில் கலியுகக் கடவுளும் காரணகடவுளும் ஆகிய முருகன் வீற்றிருந்து தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு அருள்பாலிக்கிறார்
மலையானது சுமார்100 ஏக்கர் பரப்பளவில் அகன்று காணப்படுகின்றது.எழில்மிக்க மயில்கள் மிகுந்துள்ளன.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தங்கத்தேரில்:
மலையைச்சுற்றி
பட்டாலீசுவரர் ஆலயம்:
பால்வெண்ணீசுவரர்-நல்லமங்கை அம்மன்
நஞ்சுண்டேசுவரர் ஆலயம்:
வீரகாளி அம்மன்:
மாரி அம்மன்:
அனுமந்தராயன்:
கரியகாளி அம்மன்:
கரியகாளியம்மன் ஆலயம் பரம்சேர்வழி என்னுமிடத்தில் உள்ளது.இவ்வாலயம் பிரசித்தி பெற்ற துர்க்கையம்மனின் ஆலயமாகும்.
சிவன்மலையில் திருவிழக்கள்:
சூரவதத் திருவிழா,கந்ந சஸ்டி,தைப்பூசம்,ஆவணி அவிட்டம்,கார்த்திகை தீபத்திருவிழா போனற விழாக்கள் இங்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
அருகாமையில்:::
பேருந்து நிலையம்:
காங்கேயம்,திருப்பூர்,முத்தூர்,ஈரோடு.
தொடர்வண்டி நிலையம்:
கோயமுத்தூர்,ஈரோடு,திருப்பூர்.
வானூர்திச் சேவை:
கோயமுத்தூர்.
இணைய முகவரி:::
http://www.sivanmalai.net.
http://www.sivanmalai.org.
என்னங்க எங்க புறப்பட்டுட்டீங்க?நானும் வர்றனுங்க!! சிவன்மலைக்கா? அங்க கேயில் திருப்பணி நடக்குதுங்க.அதுக்கு நீங்களும் உங்களால முடிஞ்ச பொருளுதவியும் பண உதவியும் செய்து எல்லாம் வல்ல
முருகனின் திருவருளைப் பெறுங்க!!!
நன்றி...
1 கருத்து:
thanks. :)
கருத்துரையிடுக